Wednesday, February 27, 2013
தஞ்சாவூர்::தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது கட்சி எம்.எல்.ஏ.வே அடித்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராவதற்காக தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்று விஜயகாந்த் வருகை தந்திருந்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தார்.
அப்போது தேமுதிக தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் விஜயகாந்த்தை சூழ்ந்து கொண்டனர். அவர்களை விலக்கிக் கொண்டிருந்தார் அவரது கட்சி எம்.எல்.ஏ. ஒருவர். அப்போது சில தொண்டர்களை அடிக்கவும் தொடங்கினார் அவர்.
தொண்டர்களை அடித்துக் கொண்டிருந்த அந்த எம்.எல்.ஏ. என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திடீரென விஜயகாந்த்தையும் ஓங்கி அடித்துவிட்டார்.
எல்லோரையும் அடித்து வெளுத்து வாங்கக் கூடிய, சட்டசபையில் நாக்கை துறுத்திப் பேசக் கூடிய தம்மையே தமது கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் அடித்ததால் விஜயகாந்த் கடும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
கட்சி எம்.எல்.ஏ.வே விஜயகாந்த்தை அடித்த காட்சியைப் பார்த்த தொண்டர்கள் ஒரு கணம் ஸ்தம்பித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொது இடத்தில் சகட்டுமேனிக்கு அடிக்கக் கூடியவர் விஜயகாந்த்.. அவருக்கே அடி என்றால் அந்த எம்.எல்.ஏ. வின் கதி என்ன ஆகுமோ என்றும் அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment