Wednesday, February 27, 2013
தூத்துக்குடி::இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவை கண்டித்தும், ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு, மாவட்ட தலைவர் இசக்கிதுரை, இளைஞரணி செயலாளர் வேல்ராஜ், ஜெயசீலன், தமிழினியன், பட்டாணி, லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ராஜபக்சே, சோனியாகாந்தி, கருணாநிதி உருவபொம்மைகளை தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற ஏ.எஸ்.பி.மகேஷ் தலைமையிலான போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment