Wednesday, February 27, 2013

புலிகளின் பயங்கரவாத யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகளுக்குள் வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள்: இலங்கை அரசாங்கத்தின் நற்பணிகளை பாராட்டாமல் சர்வதேச சமூகம் குற்றம் சுமத்துவது நல்லதல்ல!

Wednesday, February 27, 2013
இலங்கை:: புலிகளின் பயங்கரவாத யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகளுக் குள் அரசாங்கம் நாடெங்கிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் மேற்கொண்டுவரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து சர்வதேச சமூகத்துக்கு நன்கு தெரியும். அப்படியிருந்தும் சர்வதேச சமூகம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கிலுள்ள மக்க ளுக்கு கடந்த 3 ஆண்டுகாலமாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் வாழ்வாதார செயற்பாடுகள் குறி த்து சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு பாராட்டு தெரி விப்பதற்கு பதில் நடந்து முடிந்த பயங்கரவாத யுத்தத்தின் சில நிகழ்வுகளை குறிவைத்து அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எடுத்து வரும் முயற்சிகள் யதார்த்தமாக சிந்திக்கக்கூடிய எவராலும் சரியானதென்று அங்கீகரிக்க முடியாது.

எல்.ரி.ரி.ஈ பயங்கரவாத யுத்தத்தில் இறுதி நாட்களின் போது இருதரப் பினருக்கும் இடையில் பலத்த சண்டை ஏற்பட்ட போதிலும் இலங்கை இராணுவத்தினர் யுத்த களத்தில் செய்வதறியாது சிக்கி யிருந்த சுமார் மூன்றரை இலட்சம் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் மனிதாபிமான முறையில் யுத்தத்தை மிகவும் அவதானமாக நடத்தியது.

எல்.ரி.ரி.ஈ யினர் தங்களுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் நடுவில் அப்பாவி மக்களை நிலைகொள்ளச் செய்து அவர்களை யுத்தக் கேடயங்களாக பயன்படுத்தினார்கள்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இராணுவத்தினர் பொதுமக்க ளுக்கு அப்பால் இருக்கும் எல்.ரி.ரி.ஈ. யினரை நோக்கிய ஏவு கணைத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அதனால் பொது மக்களுக்கு எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

எல்.ரி.ரி.ஈ. யின் ஈவிரக்கமற்ற கெடுபிடிகளிலிருந்து தப்பித்து இராணு வத்தரப்புக்கு ஓடி வர எத்தணித்த பொதுமக்களில் பெரும்பாலா னோரை எல்.ரி.ரி.ஈ யின் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் மிலேச்சத்தனமாக ஓடிவரும் மக்களின் முதுகுப்புறத்தில் சுட்டுச் கொன்றார்கள்.

இத்தகைய அவல நிலையிலும் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் அர சாங்க தரப்புக்கு தப்பி வந்த பொதுமக்களை இராணுவத்தினர் துன்புறுத்தாமல் அவர்களை அன்போடு உபசரித்து தற்காலிக குடிசை களை அமைத்து அம் மக்களுக்கு உணவையும் தண்ணீரையும் கொடுத்துதவினார்கள்.

இவ்விதம் அரசாங்க தரப்புக்கு போய்ச் சேர்ந்த சுமார் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பாதுகாப்பாக புனர்வாழ்வு பெற்று இன்று தங் கள் சொந்த வாசஸ்தலங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி களின் 90 சதவீதமான நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்துள்ள தாக துறைமுக நெடுங்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

இதே வேளையில் சர்வதேச நாணய ஒத்துழைப்புக்கான சிரேஷ்ட அமைச்சரும் பிரதி நிதியமைச்சருமான சரத் அமுனுகம அரசாங் கம் வடமாகாணத்தின் கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய் வதற்காக 1350 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கி யிருப்பதாகவும் இது ரயில் பாதைகளை அமைப்பதற்கும், மின்சார விநியோகத்தை விஸ்தரிப்பதற்கும், நெடுஞ்சாலைகளை சீரமைப் பதற்கும், நீர்விநியோகம் மற்றும் சுகாதார வசதிகளைப் பெருக்கும் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

எங்கள் நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக இவ்வளவு பெருந்தொகை பணம் வடமாகாணத்தின் அபிவிருத்திக்காக ஒதுக் கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த அமைச்சர் அமுனுமக வடக்கில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகளை சர்வதேச சமூக மும் மனித உரிமைக்கான அமைப்புக்களும் நன்கு தெரிந்துகொண் டுள்ளன என்று கூறினார்.

வடபகுதியின் ரயில் பாதைகளை விஸ்தரிப்பதற்காக 735 மில்லியன் ரூபா செலவில் அரசாங்கம் துரிதப்பணிகளை மேற்கொண்டு வரு கின்றது. வடபகுதிக்கான ரயில் பயணத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் ஓமந்தையில் இருந்து பலாலி வரையில் 90.5 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதை ஒன்று அமைக்கப்படும்.

இத்துடன் வவுனியா காங்கேசன் துறைக்கான இரயில் பாதையும், மாதவாச்சிய மடு இரயில் பாதையும், மடு தலைமன்னார் இரயில் பாதையும் திருத்தியமைக்கப்பட உள்ளன.

யுத்தத்தின் போது எல்.ரி.ரி.ஈ. யினால் உடைத்து நாசமாக்கப்பட்ட பாலங்களையும் இப்போது மீள்நிர்மாணம் செய்யும் பணிகளை அரசாங்கம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்த பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய பாலங்களையும் வீதிகளையும் அமைத்து இப் பிரதேச மக்களை பொருளாதார அபிவிருத்தியுடன் இணைப்பதே தங்கள் இலட்சியமாகும் என்றும் கூறினார்.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு இடையிலான ஏ-15 நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் 90 சதவீதத்துக்கும் அதிகமாக பூர்த்தியடைந்திருப்பதாகவும் கூறினார். ஏ-15 வீதியில் உள்ள சகல பிரதான பாலங்களை கிழக்கின் உதயம் திட்டத்தின் கீழ் அரசாங்கம் நிர்மாணித்திருக்கிறதென்றும் இதனால் முன்பிருந்த பாதை படகுச் சேவைகள் இப்போது நிறுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

உப்பாறுபாலம் 995 மில்லியன் ரூபா செலவிலும், கங்கை பாலம் 956 மில்லியன் ரூபா செலவிலும், இரால்குழி பாலம் 571 மில்லியன் ரூபா செலவிலும், காயன்கேணி பாலம் 202 மில்லியன் ரூபா செல விலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதி அமைச்சர் தெரி வித்தார்.

இவ்விதம் யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு பிரதேச மக்களுக்கு அரசாங்கம் செய்துவரும் சேவையை கண்டுகொள்ளாமல் அரசாங் கத்தின் மீது சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிரான சில சுயநல நோக்குடைய அமைப்புக்களின் தூண்டுதலின் பேரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டிக்க முயற்சிப்பது வேதனையளிக்கிறது.

புலிகளின்  பயங்கரவாத யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகளுக்குள்  வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள்: இலங்கை அரசாங்கத்தின் நற்பணிகளை பாராட்டாமல் சர்வதேச சமூகம் குற்றம் சுமத்துவது நல்லதல்ல!

No comments:

Post a Comment