Wednesday, February 27, 2013
கனடா::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு குறித்த தீர்மானத்தில் மாற்றமில்லை என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் நிச்சயமாக அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும், தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் கிடையாது என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை நிலைமைகள், நல்லாட்சி, ஜனநாயகம், நீதிமன்றின் சுயாதீனத்தன்மை போன்ற விடயங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென கனடா கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இலங்கை நிலைமைகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமைகள் மோசமடைந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். உரிய விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment