Wednesday, February 27, 2013

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானோரை சிறைக்கு அனுப்பாது புனர்வாழ்வளிக்க புதிய சட்டம்!

Wednesday, February 27, 2013
 இலங்கை::போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான புதிய சட்டங்களை உருவாக்க சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தீர்மானித்துள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை சிறைக்கு அனுப்பாது புனர்வாழ்வளிப்பதற்கான புதிய சட்டங்கள் தயாரிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் G.S.விதானகே தெரிவித்தார்.

இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றத்தின் மூலம் அவர்களை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்புவதற்கு புதிய சட்டங்களின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக 250 சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டு வவுனியா புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment