Wednesday, February 27, 2013

இரண்டு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கையை கனடா நிராகரித்துள்ளது!

Wednesday, February 27, 2013
கனடா::இரண்டு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கையை கனடா நிராகரித்துள்ளது. எம்.வி. சன் சீ கப்பலின் மூலமாக கனடாவிற்குள் பிரவேசித்தவர்களே இவ்வாறு புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் செய்துள்ளனர். கனடாவின் மத்திய நீதிமன்றம் குறி;த்த இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

குறித்த கப்பலில் பயணித்த காரணத்திற்காக கனேடிய குடிவரவு குடியகழ்வுத்திணைக்களம் ஏற்கனவே புகலிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த இலங்கையர்களை கனடா நாடு கடத்தினால் சொந்த நாட்டில் அவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறெனினும் இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம், குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் மீள விசாரணை நடாத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment