Wednesday, February 27, 2013
புதுடெல்லி::இலங்கை போர்குற்றம் குறித்து மாநிலங்களவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயின் கொண்டு வந்தார். அப்போது விளக்கம் அளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை தமிழர்களுக்கு இந்தியா பெரும்பாலான மனித உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், 2012 செப்டம்பர் மாதம் அனைத்து முகாம்களும் மூடப்பட்டதாக இலங்கை அரசு, இந்தியாவிடம் தகவல் அளித்துள்ளதாக கூறினார். அதுமட்டுமின்றி இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் சல்மான் குர்ஷித் கூறினார். இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே இந்தியா விரும்புகிறது என சல்மான் குர்ஷித் விளக்கம் அளித்தார்.
No comments:
Post a Comment