Thursday, February 28, 2013

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை செய்யக் கூடும் - முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரிக்கை!

Thursday, February 28, 2013
இலங்கை::யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை செய்யக் கூடுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அனுமதி பெற்றுக்கொள்ளாது, யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தக் கூடிய வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்ட திட்டங்களில் மாற்றம் செய்யப்படக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வீசா அனுமதியின்றி நேரடியாக விசாரணைக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் வகையில் தீர்மானமொன்றை நிறைவேற்ற முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச குழுவொன்று இலங்கைக்கு நிச்சயம் விசாரணை நடாத்த வரும் என அவா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவர்கள் என்னிடம் கேள்வி எழுப்ப மாட்டார்கள், யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment