Thursday, February 28, 2013
லண்டன்::இலங்கையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் காயங்களை ஆற்ற முடியும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
புலிகளின் க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு லண்டனில் நடைபெறவுள்ள அமர்வுகளுக்கான வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதே பிரித்தானியாவின் விருப்பமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்கம், நீதி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை உரிய முறையில் விசாரணை நடாத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சாட்சிகளுடன் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் தேசிய வாழ்விற்கு புலம்பெயர் தமிழர்கள் காத்திரமான பங்களிப்பினை வழங்கியுள்ளதாக டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment