Wednesday, February 27, 2013
இலங்கை::புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் சந்தேக நபர்களை பாலியல் ரீதியாக படையினர் துன்புறுத்தியதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புப் படையினர் எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பாலியல் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சில படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், ஆதாரங்கள் இன்றி இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் படையினர் கடுமையான ஒழுக்க விதிகளை பின்பற்றி வருவதாகவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அவ்வாறு குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment