சென்னை::இந்தியாவில் செயற்படும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை தொடர்பில் வெளியிட்ட புதிய அறிக்கைக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் பதில் வழங்கியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட புலி சந்தேகத்திற்குரியவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தி தகவல் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் முறையிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் செயற்படும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய வலய பணிப்பாளர் மினக்ஸி கங்குலி, இலங்கையில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் துன்புறுத்தல் சம்பந்தமான 75 சம்பவங்கள் குறித்த ஆவணப்படுத்தல் தம்மிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான சம்பவங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதும், தற்போது இலங்கை நெருக்கடியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மேலும் சிக்கலான சூழ்நிலைக்கு உள்ளாக்கும் குற்றச்சாட்டு என்று புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அந்த குற்றச்சாட்டுகள் இதுவரை எந்தவிதத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய விசாரணைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் இன்றி இலங்கை பாதுகாப்பு தரப்பினர் சித்திரவதை மூலம் தகவல் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்த முடியாது என்றும் பிரசாத் காரியவசம் தமது பதிலறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment