Tuesday, February 26, 2013
இலங்கை::புலிகளின் முன்னாள் உறுப்பினர் இருவர் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை, புனாணை பிரதேசத்தில் வைத்து காரொன்றை கடத்திச்செல்வதற்கு முயன்றவேளையில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்து இவ்விருவரும் தப்பிச்சென்று விட்டனர்.
இதனையடுத்து திம்புலாகல மலையில் இராணுவத்தினர் தேடுதல் நடத்தியதுடன் தப்பியோடுவதற்கு முயன்ற இருவர் மீதும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளர்.
அந்த துப்பாக்கி பிரயோகத்திலேயே முன்னாள் புலிகளின் உறுப்பினர் இருவரும் சற்று முன்னர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் கொள்ளை கோஷ்டியின் உறுப்பினர்கள் என்றும் நகைகள் மற்றும் பணங்களை கொள்ளையடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்விருவரும் வெளிநாட்டுக்கு செல்வதற்காகவே காரை கடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சுற்றிவளைப்பு தேடுதலில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment