Thursday, February 28, 2013

அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதிகளுக்கு இணைப்பு வீசாக்கள் வழங்கப்படுவது தொடர்பில் மறுபரிசீலனை

Thursday, February 28, 2013
அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதிகளுக்கு இணைப்பு வீசாக்கள் வழங்கப்படுவது தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு, அவுஸ்திரேலியாவின் எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது.

எதிர்கட்சியின் குடிவரவுத்துறை பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இவ்வாறு இணைப்பு வீசா வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட இலங்கையர் ஒருவரால், 20 வயது யுவதி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே அவுஸ்திரேலிய எதிர்கட்சி இதனை வலியுறுத்துகிறது.

பாதுகாப்பு மற்றும் இணைப்பு வீசாக்கள் வழங்கப்பட்டு பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை உண்ணிப்பாக அவதானிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment