Thursday, February 28, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை நாம் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். ஆயினும், இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22 வது கூட்டத் தொடரில் நேற்று உரை யாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறி யதாவது,
கொலைச் சம்பவங்கள் தொடர்பில் நீதி விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை, தடயவியல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு நட்ட ஈடுகள் வழங்கப்படுகின்றன, அல்லது மாற்றுக் காணிகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், வடக்கில் இன்று இராணுவ நிர்வாகத்திற்கு இடமில்லை.
அங்கு முழுமையாக குடியியல் நிர்வாகமே மேற்கொள்ளப்படுகின்றது.
வடக்கில் உள்ள பொது மக்கள் முழுமையாக சுதந்திரமான நடமாட்டத்தை அனுபவிப்பதாக இன்றைய அமர்வில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் படி இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பில், சனல் 4 காணொளி, அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறது.
இந்த நிலையில், சனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கையின் இராணுவ தளபதியால் நியமிக்கப்பட்ட நீதிமன்றம் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
புலிகள் இலங்கையைச் தவிர, மேற்கத்தைய நாடுகளில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள், இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்பாடுகளை மூடிமறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் இலங்கைக்கு எதிராக நீதியற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையினை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.
எனினும், அந்த குழு நவநீதன் பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை.
அதற்கு பதிலாக நவநீதன் பிள்ளை தற்போது இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு சான்றுகளை தேடும் வகையிலேயே அந்த குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மகிந்த சமரசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பேரவை, இலங்கையை நடுநிலையாக நடத்த வேண்டும்.
அத்துடன் நல்லிணக்கம் மற்றும், மனித உரிமைகள் மேம்பாடு குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நேற்று மாலை இலங்கை நேரப்படி 5.18 இற்கு ஆரம்பித்த அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் உரை 25 நிமிடங்களுக்கு நீடித்தது.
நாம் இந்தப் பிரேரணையை நிராகரித் தாலும் நிரந்தர சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் வளமான வாழ்வையும் எங்கள் நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் திடசங்கற்பம் பூண்டிருக்கி றோம் என்பதை இங்கு வலியுறுத்த விரும் புகிறேன். நெறியான நல்லிணக்கப்பாட்டை உள்ளூரில் தயாரிக்கப்படும் ஒரு தீர்வின் மூலம் ஏற்படுத்துவதே எமது கொள்கையின் அடி த்தளமாக அமைந்துள்ளது. தொடர்புகளை அறுத்தெறியும் கொள்கையை கடைப்பிடிக்க விரும்பவில்லை.
நாம் தொடர்ந்தும் யதார்த்த பூர்வமான மற்றும் வெளிப்படையான உரையாடலை மேற்கொள்ளும் கொள்கை யையே கடைப்பிடிக்க விரும்புகிறோம்" 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கை தொடர்பான மும்மொழியப்பட்ட பிரே ரணையில் நாம் ஏற்கனவே நடைமுறைப் படுத்திக்கொண்டிருக்கும் செயற்பாடுகளை செய்யுமாறு கேட்கப்பட்டது. அதற்கமைய நாம் செயற்பட்டோம். ஆரம்பத்திலிருந்ததைப் போன்று எமது சம்பிரதாயத்துக்கு அமைய நாம் தொடர்ச்சியாக எமது செயற்பாடுகள் குறித்து பேரவைக்கு அறிவித்ததுடன், பிராந்தியங்களுக்கு அப்பால்பட்ட குழுக்களுடனும் இதுபற்றி கலந்துரையாடல்களை நடத்தினோம்.
இலங்கை நிலை பற்றிய பிராந்திய குழுக்களின் பிரதிநிதிகளுடன் நாம் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந் தோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடர் நடந் துகொண்டிருக்கும்போது அக்கட்டடத்தில் உள்ள வேறு மண்டபங்களில் நாம் இலங்கையின் நிலைப்பாடு குறித்தும், அவற்றின் முன்னேற்றம் குறித்தும் தகவல்களை வெளியிட்டு அவை தொடர்பாக கலந்துரையாடல்களையும் நடத்தினோம். நாம் ஒளிவு மறைவற்ற முறையில் பகிரங்கமாக நாமடைந்த வெற்றிகளையும், நாங்கள் எதிர்நோக்கும் சவால்களையும் அங்கு வெளியிட்டோம்.
இலங்கை தொடர்பான அந்தத் தீர்மானம் சரியான நேரத்தில் கொண்டு வரப்படவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். இந்தப் பிரேரணை அனாவசியாமானதாகவும், மனித உரிமைகளின் அடிப்படை சித்தாந்தங் களையே மீறுவதாகவும் அமைந்துள்ளது. நாம் கொள்கை அடிப்படையில் இந்தப் பிரேரணையை திட்டவட்டமாக நிராகரிக்கின்றோம். ஆயினும், இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அரசாங்கம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை முழுமையாகப் பார்த்து மதிப்பீடு செய்யப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இதனை நெறியான நோக்குடன் நடுநிலையான முறையில் இப்பேரவை ஆராய்வது அவசியமாகும். எங்கள் நாடு இது தொடர்பாக அடைந்துள்ள முன்னேற்றத்தை பேரவையின் உரையாடலில் நாம் கலந்துகொள்வதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
எவ்விதம் இருப்பினும் இப்பேரவையில் கலந்துகொள்ளும் நாடுகளின் பெரும்பாலான தூதுக்குழுவினர் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை திருப்தியுடன் அங்கீகரித்திருப்பதை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இந்தத் தூதுக்குழுக்களின் இந்தச் செயற்பாடு எங்களுக்கு ஒரு ஊக்க சக்தியாக இருந்தது. இதனையே நாம் ஆக்கபூர்வமான ஆதரவு என்று நாம் கருதுகிறோம்.
சில விடயங்களை உன்னிப்பாக அவதானித்து தெரிவித்துள்ள கருத்துக் களிலிருந்து சில அம்சங்கள் மேலும் சிறப்பாக செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பதை நாம் ஆகக்குறைந்த ஆக்கபூர்வமான யோசனை யாகவும், உதவக்கூடிய யோசனைகள் அல்ல என்றும் கருது கின்றோம்.
ஆதாரபூர்வமற்ற முறையில் சில விடய ங்களை பெயர் குறிப்பிட்டு கண்டிப்பதும், அவமானப்படுத்துவதும் இந்தப் பேரவையின் குறிக்கோளுக்கு மாறான மாற்று நோக்கத்தையுடைய செயற்பாடுகளாகவே நாம் கருதுகிறோம். எமக்கு நேர அவகாசமும், சற்று இடைவெளியும் அவசியம். அவைத் தலைவர் அவர்களே, நாம் எமது பணிகளை செய்து முடித்தவுடன், நாம் நிச்சயமாக எமது மக்களுக்கும் நாட்டுக்கும் ஒரு சிறந்த பணியை செய்து முடிப்போம் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது.
நீண்டகால பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மூன்று கால் ஆண்டுகள் கடந்துள்ளன. எங்கள் நாட்டு மக்களை பயங்கரவாதப் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காக மனிதாபிமான முறையில் மேற்கொள் ளப்பட்ட செயற்பாட்டின் வெற்றியிது. சுமார் மூன்று தசாப்தங்களாக துன்பம் அனுபவித்த எமது மக்களுக்கு நிரந்த ஸ்திரநிலையையும், சமாதானத்தையும், வழமான வாழ்வையும் இதன்மூலம் நாம் பெற்றுக்கொடுப்போம்.
இதையடுத்து இலங்கை அரசாங்கம் நம் நாட்டுப் பிரஜைகளின் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கு தன்னாலான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மக்களை ஒன்றிணைத்தல் மற்றும் நல்லிணக்கப் பாட்டுத் திட்டத்தை கடைப்பிடித்தல் போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் மூலம் எங்கள் நாடு நிலையான அபிவிருத்தியையும், சமூக முன்னேற் றத்தையும் என்றும் நிலைத்திருக்கும் சமாதானத்தையும் பெற்றிருக்கிறது.
புனர்நிர்மாணத்துக்கு அமைய சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் சிவில் நிர்வாகத்தையும் வாழ்வாதாரத்தையும் வீடமைப்புத் திட்டங்களையும் நாம் செயற்படுத்தினோம். முன்னர் யுத்தத்தினால் சீர்குலைந்துபோன வடபகுதியில் 27 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2011இல் இலங்கையின் முழுமையான உள்நாட்டு உற்பத்தி 8 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
எல்.ரி.ரி.ஈ.யினால் முற்றாக சீர்குலைக்கப்பட்ட வடபகுதிக்கான ரயில் பாதை இப்போது புனர்நிர்மாணம் செய்யப்படுகிறது. இப்போது வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரையிலான 177 கிலோமீற்றர் தூரத்துக்கான ரயில் பாதையை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் வேகமாக நிறைவேற் றப்பட்டு வருகின்றன. இந்தப் பணி 2015ஆண்டு முடிவடைவதற்குள் பூர்த்திசெய்யப்படும் என்றும் இதுவே, வடபகுதிக்கும் தென்பகுதியிலுள்ள சகோதர மக்களுக்கும் இடையிலான வர்த்தகத்தையும், போக்குவரத்தையும், தொலைத்தொடர்பையும் ஏற்படுத்தக்கூடிய /யிர்நாடியான ரயில் பாதையாக அமைந் துள்ளது.
உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் என்றுமில் லாதவாறு மகத்தான முன்னேற்றத்தை நாம் கண்டுள்ளோம். கண்ணிவெடிகளை அகற்றியதன் மூலமே இதனை நாம் சாதித்துள்ளோம். 2009 மே மாதத்தில் எல்.ரி.ரி.ஈ இறுதியில் தோற்கடிக்கப்பட்ட போது 295,000ற்கும் அதிகமான உள்ளூரில் இடம்பெயர்ந்த வர்கள் இருந்தார்கள். இவர்கள் 2008 ஏப்ரல் மாதம் முதல் இடம்பெயர்ந்த மக்களாவர். யுத்தம் முடிவடைந்தவுடன் இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் அன்பான பராமரிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டார்கள்.
உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல் மற்றும் அவர்கள் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்பும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக விசேட ஜனாதிபதி பணிப்படையொன்று புனர்நிர்மாண மீள்குடியேற்றத்துக்காக ஏற்படுத்தப்பட்டது. வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் அதேவேளையில் அங்கு உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட்டார்கள். கூடியவரையில் இந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள்குடியேற்றினோம். அவ்விதம் செய்ய முடியாத சர்ந்தர்ப்பங்களில் இந்த மக்களுக்கு வேறு இடங்களில் காணி ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டது.
2012 செப்டம்பர் 24ஆம் திகதியன்று உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களின் கடைசிக் குழுவினர் முல்லைத்தீவிலுள்ள அவர்களின் கிராமங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். 361 குடும்பங்களைச் சேர்ந்த 1186 பேர் இவ்விதம் மீள்குடியமர்த்தப்பட்டனர். இதன்படி 242,449 இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 28,398 பேர் நாட்டின் பல பகுதிகளில் தங்கள் குடும்பங்களுடன் ஒன்றிணைந்துள்ளார்கள். இந்த மக்களிலும் 200 குடும்பங்கள் 2012 செப்டம்பர் மாதத்தில் முல்லைத்தீவில் அவர்களின் பூர்விக இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். இறுதியில் முகாம்களிலிருந்து 7, 264 பேர் வெளியேறி இன்னும் அங்கு திரும்பவில்லை. மேலும் 1380 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யுத்தத்தினால் நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்கு மேற்கு பகுதிகளிலுள்ள மக்களும் கடந்த மூன்று தசாப்தங்களாக துன்பத்தில் துவண்டுகொண்டிருந்தார்கள். 2009ல் இந்தத் துன்பம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நல்லிணக்கப்பாட்டுக்கான பாதை திறக்கப்பட்டது.
அதேநேரம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் பாராமுகப் போக்குடன் உதாசீனம் செய்யவில்லை. இராணுவத்தளபதி இராணுவ நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்தி யுத்தத்தின் கடைசி நாட்களில் சிவிலியன்கள் பாதிப்புக்கு உள்ளானது பற்றியும், மனிதாபிமான செயற்பாடுகள் குறித்தும் விசாரணைசெய்ய நியமிக்கப்பட்டது. சனல் 4 தொலைக்காட்சி படங்களில் தெரிவிக்கப்பட்ட முறைப் பாடுகள் உண்மையானவையா அல்லது போலியானவையா என்பது குறித்தும் விசாரணை இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.
திருகோணமலையில் சர்வதேச அரசசார்பற்ற அமைப்பொன்றின் 17 உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை குறித்தும், 5 மாணவர்கள் கொல்லப் பட்டமை குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment