Thursday, February 28, 2013
கலிபோர்னியா::பிரபல, "யாகூ' இணைய தள நிறுவனத்தில், வீட்டில்இருந்தே பணியாற்றும் தொழிலாளர்களை, இனி, அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும்படி, புதிய நிர்வாகி உத்தரவிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய, இணைய தள நிறுவனமான, யாகூ, 1995ல், ஜெர்ரியாங் மற்றும் டேவிட் பிலோ ஆகியோரால் துவக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தகவல்களை, உலகில், 50 கோடி வாடிக்கையாளர்கள், மாதந்தோறும், பயன்படுத்துகின்றனர். 30 மொழிகளில், வெளிவரும், இந்த இணைய தளத்தின், புதிய தலைமை நிர்வாகியாக, கடந்தாண்டு, மாரிசா மேயர் பொறுப்பேற்றார்.இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு, அவர் பல சீர்திருத்த திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் பிறப்பித்த உத்தரவு, ஊழியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.இந்த நிறுவனத்தில் பல ஊழியர்கள், வீட்டிலிருந்தபடியே, தங்கள் பணிகளை செய்ய, சலுகை அளிக்கப்பட்டிருந்தது.ஆனால், "இனி யாரும் வீட்டிலிருந்த படி பணியாற்றகூடாது; அனைவரும், அலுவலகத்திற்கு வந்து, பணியாற்றவேண்டும்'என, மாரிசா மேயர், உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், நிறுவனத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளை சமாளிக்க முடியும் என, அவர் நம்புகிறார். இதுபோன்ற நெருக்கடிகள், ஏற்கனவே, அவர் பணியாற்றி வந்த "கூகுள்' நிறுவனத்திலும், அமல்படுத்தி, வெற்றி கண்டுள்ளார்.
No comments:
Post a Comment