Thursday, February 28, 2013

தப்பியோடிய இலங்கை அகதி மதுரையில் சிக்கினார்!

Thursday, February 28, 2013
செங்கல்பட்டு::செங்கல்பட்டில் மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய இலங்கை அகதி, மதுரையில் பிடிபட்டார். செங்கல்பட்டில் இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு 39 இலங்கை அகதிகள் உள்ளனர். இங்கிருந்த பட்டு, 49, சசிதரன், 22, ஆகியோர், கடந்த 20ம் தேதி, சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அர” மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, பட்டு, காவல்துறையினரிடம் இருந்து தப்பினார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, தப்பி ஓடிய இலங்கை அகதியை பிடிக்க செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜன், உதவி ஆய்வாளர் டில்லிபாபு, ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், மதுரையில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மதுரை சென்ற காவல் துறையினர் அங்கு, பதுங்கியிருந்த பட்டுவை சுற்றி வளைத்து பிடித்தனர். .

No comments:

Post a Comment