Wednesday, February 27, 2013

ஜெனிவாவில் அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று உரை

Wednesday, February 27, 2013
ஜெனிவா::இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை ஏற்றுச் சென்றுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க ஜெனிவாவில் இடம்பெறும் 22வது மனித உரிமை கூட்டத்தொடரில் இன்று உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு நேற்று முன்தினம் ஆரம்பமான நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனிதன் பிள்ளை தமது ஆரம்ப உரையில் இலங்கை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்த ஒவ்வொரு நாடுகள் தொடர்பிலும் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் உயர் மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இதனிடையே, அமெரிக்கா நேற்றைய தினம் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் மாநாட்டில் கருத்து வெளியிட்டது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வில்லை என்று அமெரிக்கா இதன்போது குறிப்பிட்டது.

இதனிடையே, மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் செனல் போ தொலைக்காட்சி, இலங்கைக்கு எதிரான வீடியோ காட்சியை தயாரித்துள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் மார்ச் முதலாம் திகதி ஜெனிவாவில் ஒளிபரப்பப்படவுள்ள நிலையில், அதனை ஒளிபரப்ப தடைவிதிக்க வேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே 'ஹியுமன் ரைட் வோச்" நிறுவனமும் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினால் வதை முகாம் நடத்தி செல்லப்பட்டதாக இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் எமது செய்தி பிரிவு இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவண் வணிகசூரியவிடம் வினவியது.

இதனை அவர் முற்றாக மறுத்தார். இலங்கை மீது வேண்டுமென்றே சுமத்தப்படும் குற்றச்சாட்டு இதுவெனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment