Thursday, February 28, 2013
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
புலிகளின் க்ளோபல் தமிழ் போரம் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றிய போது மில்லிபான்ட் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வலியுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மனித உரிமை, சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் போன்ற விடயங்களில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்பதனை சர்வதேச அமைப்புக்கள் வலியுறுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை வேறும் ஓர் நாட்டில் நடாத்துமாறு கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் உதாசீனம் செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என மில்லிபான்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment