Thursday, February 28, 2013
கோலாலம்பூர்::மலேசியாவில் (புலி பினாமி சீமானின் ஏற்பார்ட்டில்) இலங்கை தூதரகம் மீது தமிழர்கள் தாக்குதல்: பிரபாகரன் மகன் கொலையை கண்டித்து போராட்டம்!
பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதை கண்டித்து மலேசியா தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு (புலி பினாமி சீமானின் ஏற்பார்ட்டில்) தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழர் உதவும் கரங்கள், மலேசிய தமிழர் முன்னேற்ற இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டன.
போராட்டக்காரர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 3 தமிழக தலைவர்களை கைது செய்து அழைத்து செல்ல முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும், தமிழர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் தமிழர்கள் திடீரென இலங்கை தூதரகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். தூதரகம் முன்பக்கம் இருந்த கதவு உடைக்கப்பட்டது. போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.
7-கோடியால் முடியாததை 2-மில்லியன் மலேசியா தமிழர்கள் சாதித்துள்ளது- (புலி பினாமி சகுனி பிரிவினைவாதி
) சீமான் பெருமிதம்!:-
கோலாலம்பூர்::தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே மலேசியாவில் நடத்தப்பட்ட ஓர் இஸ்லாமிய பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரும் இதில் கலந்துகொள்வதற்கு ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் மலேசிய நாட்டில் காலடி வைக்க அனுமதிக்க மாட்டோம், அவர் இந்நாட்டிற்கு வருகை அளிப்பதற்கு மலேசிய அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கைகளை இங்குள்ள தமிழர்கள் முன்வைத்தனர்.
இந்நாட்டு தமிழர்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பின் பலனாக ராஜபக்சே இந்நாட்டிற்கு வருகை அளிப்பது தவிர்க்கப்பட்டது. இரண்டு மில்லியனுக்கும் குறைவான மலேசிய தமிழர்கள் ராஜபக்சேயை மலேசியாவுக்குள் நுழையவிடாமல் தடுப்பதில் வெற்றி பெற்றனர்.
ஆனால், ராஜபக்சே இந்தியாவுக்கு அவர் விரும்பும்போதெல்லாம் வருகிறார், போகிறார். அந்நாட்டின் 7 கோடி தமிழர்களால் ராஜபக்சேயின் இந்திய வருகையைத் தடுத்து நிறுத்தவில்லை.
கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழர் பணிப் படை பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக வருகையளித்திருந்த தமிழ் நாடு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.
“தமிழ் நாட்டில் தமிழர்கள் தலைவர்களாக இல்லை. ஆட்சியில் இருப்பவர்களும் போலீசாரும் தடைகள் பலவற்றை போடுகின்றனர். அவற்றையும் மீறி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்”, என்று சீமான் கூறினார்.
“தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் எழுச்சியின் விளைவாக அமெரிக்க முன்மொழியவிருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளது”, என்று அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment