Thursday, February 28, 2013
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதன் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படக் கூடுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் பலியோமவாகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 30 ஆண்டுகளாக யுத்தம் நடைபெற்றதாகவும், இறுதி சில மாதங்கள் தொடர்பில் மட்டும் கவனம் செலுத்துவது பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளுக்கு எதிராக இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றுவதனை விடவும் வேறும் காத்திரமான வழிகளில் பிரச்சினைகளுக்க தீர்வு காண அமெரிக்கா முயற்சிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
புலிகள் உலகின் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களை விடவும் அதிகளவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் நிறைவடைந்து சில காலங்களில் இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கில் மேற்கொண்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை பாராட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு நல்ல விடயமும் பாராட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.தென் ஆசிய விவகாரங்கள் தொடர்பில் காங்கிரஸ் சபையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தத்தின் பின்னர் அனைத்து இனங்களுக்கும் சம உரிமைகளை வழங்கி அபிவிருத்தியை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment