Friday,January 25, 2013
இலங்கை::இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு இம்முறை மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ளது.
கொழும்பின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3;ம திகதி முதல் 5ம் திகதி வரையில் இந்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது.இந்த மநாhட்டில் கலந்து கொள்ளுமாறு 62 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் 44 நாடுகளுக்கு கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டு முதல் சுயாதீன புத்திஜீவிகள் கருத்தரங்கில் உரையாற்ற சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.பல்வேறு துறைகள் தொடர்பில் இந்த கருத்தரங்கில் கலந்துரையாடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment