Tuesday, January 29, 2013
செங்கல்பட்டு::செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் காவல் ஆய்வாளரை அகதிகள் சிறைவைத்தனர்.
செங்கல்பட்டில், இலங்கை அதிகள் சிறப்பு முகம் உள்ளது. இங்கையிலிருந்து முறையான கடவுசீட்டு மற்றும் விசா ஆகியவைகளின்றி தழிழகத்திற்கு வந்தது, குற்றச்செயல்களில் ஈடுபட்டது, ஆயுதம் கடத்தியது ஆகியவை தொடர்பாக க்யூ பிராஞ்ச் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்த 36 பேர் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று, அவர்களை பார்க்க உறவினர்கள் வந்தவர்களிடம், காவல்துறையினர் சோதனையிட்டபோது, அலைபேசி சிம்கார்டு மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவல் அகதிகளுக்கு தெரிந்தவுடன், உள்ளே பணியற்றிய ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ராஜப்பிரகாசத்தை சிறைவைத்தனர். தகவலறிந்த வருவாய்த்துறையினர் அகதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி காவல் ஆய்வாளரை மீட்டனர்.
No comments:
Post a Comment