Tuesday, January 29, 2013

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க உயர் மட்ட குழு: எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு!

Tuesday, January 29, 2013
இலங்கை::இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க உயர் மட்ட குழு நேற்று பிற்பகல் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு கொழும்பு மா நகர முதல்வரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையின் மனித உரிமை குறித்த நிலைமை தொடர்பில் விரிவாக பேசப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவது தொடர்பில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் எதிர்கட்சித் தலைவர் விளக்கம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

இதே போன்று, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பான குற்றவியல் பிரேரணை மற்றும் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து, அமெரிக்க பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவரை வினவியதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகத்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் அண்மைக்காலமாக நிலவும் மதங்களுக்கு இடையேயான முறுகல் நிலை குறித்தும் அமெரிக்க குழுவினர் எதிர்கட்சித் தலைவரிடம் கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

No comments:

Post a Comment