Tuesday, January 29, 2013

நாம் புலிகளின் பயங்கரவாதத்தினாலும் பிரிவினை வாதத்தாலும் பல தசாப்தங்கள் பாதிக்கப்பட்டவர்கள். நாட்டில் மீண்டும் அவை தலைதூக்காத வகையில் செயற்படுவது நம் அனைவரதும் பொறுப்பாகும்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, January 29, 2013
இலங்கை::தாய் நாட்டையும் மக்கள் நலனையும் உதாசீனப்படுத்தி வெளிநாடுகளுக்காகக் கருத்துத் தெரிவிப்பவர்கள் அண்ணாந்து பார்த்து எச்சில் உமிழ்பவர்களென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நாம் புலிகளின் பயங்கரவாதத்தினாலும் பிரிவினை வாதத்தாலும் பல தசாப்தங்கள் பாதிக்கப்பட்டவர்கள். நாட்டில் மீண்டும் அவை தலைதூக்காத வகையில் செயற்படுவது நம் அனைவரதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில், மதங்களுக் கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி நாம் எமது பயணத்தை முன்னெடுப்பது அவசியம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, சகோதரப் பிணைப்பில் நாம் ஒன்றிணைந்து சகல மதங்களுக்கும் கெளரவமளித்து நாட்டை அபிவிருத்தியில் முன்னேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராம விஹாரையில் புதிதாக நிர்மாணிக் கப்பட்டுள்ள குகை விஹாரையை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 3 அல்லது நான்கு ஆண் டுகளுக்கு முன்னர் இருந்த நிலை மையை இப்போது சிலர் மறந்து விட்டனர். அதேபோன்று பல வரு டங்களாக யுத்தம் செய்து பெற்றுக் கொண்ட வெற்றியையும் சிலர் மறந்து விட்டனர். அபயாராம விஹாரை நாயக் கத் தேரர் தாதியர்களுக்காகக் குரல் கொடுப்பவர். சமூகத்தின் முன்னேற்றத் திற்காகக் குரல் கொடுப்பவர்.

தொழிற் சங்கங்களாக இருக்கட்டும் தேசிய ரீதியிலான வேறு அமைப்புகளாகட்டும் சமூகத்திற்குப் பிரச்சினை அல்லது அசெளகரியம் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க அவர்களுக்கு உரிமையுண்டு. அதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விஹாரையை நிர்மாணிப்பதற்கு பெளத்தர்கள் மட்டுமன்றி ஏனைய மதத்தினரும் தமது பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இத்தகைய ஒற்றுமை ஐக்கியம் மதங்களுக்கிடையில் இனங்களுக்கிடையில் இருக்க வேண்டும். ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் அதனோடுதான் எமது பயணம் முன்னெடுக்கப்பட வேண்டும். இனங்கள் மதங்களுக்கிடையிலும் இத்தகைய ஒற்றுமை அவசியம்.

நாம் பல வருடங்களாக இனவாதம், பிரிவினை வாதத்தினால் பாதிக்கப்பட்ட வர்கள். பயங்கரவாதத்தையும் இன வாதத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து இப்போதுதான் ஒரு பாதையில் பயணிக் கிறோம். எமது மக்களுக்காக நாம் ஒன்றிணைந்து இனவாதம், பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்காத வகையில் செயற்பட வேண்டும். அது நம் சகலரதும் பொறுப்பாகும்.

ஐக்கியத்தை ஏற்படுத்தியே நமது பயணத்தை முன்னெடுக்க வேண்டும் நான் பெளத்தன் என சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. அதேபோன்று இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினரும் அவர்களின் மதத்தில் பற்றுடையவர்கள். இவற்றில் ஒரு ஒற்றுமையுண்டு. இந்த நாட்டில் வாழும் நாம் அனைவரும் சகோதர பாசத்தில் பிணைக்கப்பட்டவர்கள்.

எமது சிலருக்கு பல்வேறு அமைப்பு களுள்ளன. சிலர் இப்போதும் ஜெனீவாவுக்குச் செல்ல தயாராகின்றனர். இவர்களுக்கு நாட்டின் மீதோ கிராமிய மக்கள் மீதோ கவலையில்லை. அவர்கள் வெளிநாடுகளுக்காகவே கருத்துக்களைக் கூறி வருகின்றார்கள். இலங்கை மக்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. அவர்கள் எமது நாட்டுக்கன்றி வெளி நாட்டுக்காகவே பேசுகிறார்கள். பத்திரிகை களில் வரும் அவர்களது கட்டுரைகளை நம்மவர் அன்றி வெளிநாட்டவர்கள் வாசிப்பதற்கே எழுதுகின்றனர்.

தமது நாடு நாம் பிறந்த மண் என பார்க்காது மேலே அண்ணாந்து பார்த்து எச்சில் உமிழ்கின்றனர். நாம் இந்நாட்டில் பிறந்த இந்த நாட்டில் மரணிக்கும் மனிதர்கள்.

நாம் இந்த உலகில் வாழும்பு குறுகிய காலத்தில் வைராக்கியம், குரோதங்களுக்கு இடம்கொடுக்கக்கூடாது. இங்கு தேவலோகம் உருவாக்கிக் காட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment