Tuesday, January 29, 2013
இலங்கை::இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குரிய தீர்வாக பாக்கு நீரிணையை வரையறுக் கும் யோசனையை இந்தியா முன்வைத்துள்ளதென இணைய தளங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியினை இலங்கை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.
இணைய தளங்கள் கூறுவதுபோல் இலங்கை அரசாங்கம் இது தொடர்பிலான எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட தயாரில்லையென கூறிய அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, இருநாட்டு மீனவ செயலாற்று குழுவை அவசரமாக கூட்ட தீர்மானித்திருப்பதாக வும் தெரிவித்தார்.
இலங்கை - இந்திய மீனவ பிரச்சினை க்கு தீர்வு காணும் வகையில் ஸ்தாபிக்கப் பட்ட இரு நாடுகளுக்குமிடையிலான மீனவ செயலாற்றுக் குழு வருடாந்தம் கூடி இது தொடர்பில் ஆராய்ந்து வருகிறது. கடந்த வருடம் இக்குழு கொழும்பில் கூடியிருந்தது. அந்த வகையில் இவ்வருடத்துக்கான குழுவின் கூட்டத்தை அவசரமாக கூட்ட தீர்மானித்துள்ளோமெனவும் அவர் கூறினார்.
மேலும் இப்பிரச்சினை இரு நாடு களுக்குமிடையிலும் படிப்படியாக ஆராயப்பட வேண்டியதொன்று எனவும் அவர் வலியுறுத்தினார்.
2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட குழு கூட்டத்தில் பல சாதகமான விடயங்கள் எட்டப்பட்டிருந்தமையால் இவ்வருடத் துக்கான கூட்டத்தையும் விரைவில் நடத்த ஏற்பாடு செய்வதன் மூலம் இன்னும் பல மடங்கு சாதகமான முடிவுகளை எட்ட முடியுமென நம்புவ தாகவும் வெளிவிவகாரச் செயலாளர் தெரிவித்தார்.
இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையை மையப்படுத்தி மனிதாபிமான விடயம் தொடர்பாகவே இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இச்செயலணியில் ஆராய்ந்து வருகின்றார்கள். இதனூடாக மீனவர்களுக்கான கல்வி, விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டி ருந்ததுடன் அவை நடைமுறைப்படுத் தப்பட்டும் வருகின்றன.
கடல் எல்லை சம்பந்தப்பட்ட பிரச் சினை ஒரு நாட்டின் வளத்தை வரையறை செய்வதாகும். பிரச்சினைக்கு உடனடி தீர்வுகாண வேண்டுமென்பதற்காக எழுந்தமானமாக எந்தவொரு முடிவிற்கும் எம்மால் இணக்கிவிட முடியாது. இது எமது எதிர்கால சந்ததியினருக்குரிய சொத்து என்பதனால், இரு நாடுகளும் தீர ஆராய்ந்து படிப்படியாகவே இதற்கான தீர்வினை எட்ட வேண்டுமெனவும் செயலாளர் தெரிவித்தார்.
அதனைவிடுத்து இணையத்தளங்கள் தெரிவிப்பதுபோல் நாம் அவசரப்பட்டு இது தொடர்பிலான எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட எமக்கு உத்தேசம் இல்லையென்பதுடன் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி யாகவிருக்கும் காலத்தில் அவ்வாறான எந்தவொரு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட இறுதிவரை சம்மதிக்கமாட்டாரெனவும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment