Saturday, January 26, 2013
புதுடில்லி::இந்திய திருநாட்டின் 64 வது குடியரசு தின கொண்டாட்டம் நாடு முழுவதும் கோலாகலமாக நடந்து வருகிறது. டில்லி ,சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து மாநில, மாவட்டம் முழுவதும் விழாவில் மாணவ. மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. டில்லி ராஜ்பாத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தேசிய கொடியேற்றி வைத்தார். ஆகாயத்தில் பறந்தபடி ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பூட்டான் மன்னர் ஜிக்மி கேசார் வாங்சக் பங்கேற்றார். இவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை தளபதிகளும் ஜனாதிபதிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
அமர்ஜவான் ஜோதியில் மரியாதை :
காலை 9 . 30 மணியளவில் துவங்கிய டில்லி விழாவில் முதலில் டில்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மன்மோகன்சிங், ராணுவ தளபதி பிக்ராம்சிங், பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அண்டனி, உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நேரத்தில் ராணுவ வீரர்களின் பைப் இசை விண்ணை தொட்டது.
சிறப்பு விருந்தினராக பூட்டான் மன்னர் : இன்று டில்லியில் நடந்து வரும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஜிக்மி கேசார் வாங்சக் பங்கேற்றார். விழாவில் பங்கேற்க டில்லி வந்த மன்னர் கூறுகையில் ; எதிர்கால முன்னேற்றத்திற்கு இந்தியா- பூடான் நாட்டு உறவுகள் இன்றியமையாததாக உள்ளது என்றார். இது பல வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.
சென்னையில் கவர்னர் ரோசையா ;
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த விழாவில் கவர்னர் ரோசையா தேசிய கொடியேற்றி வைத்தார். விழாவில் முதல்வர் ஜெ., பங்கேற்றார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பை கவர்னர் ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அரசின் சாதனையை விளக்கும் அணிவகுப்பு, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
வீர தீர செயல் பதக்கம் :
நிகழ்ச்சியில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றுகளை முதல்வர் ஜெ., வழங்கினார். மாணவ, மாணவிகள் உள்பட லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டிருந்தன.



















No comments:
Post a Comment