Saturday, January 26, 2013

சுவிஸர்லாந்தினால் வழங்கப்பட்டு வந்த மனிதாபிமான வீசா அனுமதி நிறுத்தம் - திவயின!

Saturday, January 26, 2013
இலங்கை::சுவிஸர்லாந்து நாட்டினால் இதுவரை வழங்கப்பட்டு வந்த மனிதாபிமான வீசா அனுமதிகளை அந்த நாடு உடனடியாக நிறுத்தியுள்ளது. இதனால் அரசியல்வாதிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சுவிஸர்லாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் பலரின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

தமது நாடுகளில் தமக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக கூறி சிலர் விண்ணப்பித்திருந்த அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் போலியானவை என தெரியவந்துள்ளதை அடுத்தே சுவிஸ் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

கடந்தகாலங்களில் இலங்கையில் இருந்து சுவிஸ் சென்று அரசியல் தஞ்சம் கோரியவர்களில் கறுவாடு வர்த்தகர்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக திவயின கூறியுள்ளது.

No comments:

Post a Comment