Saturday, January 26, 2013

அதிகளவான தமிழர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படுவர் - இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய!

Saturday, January 26, 2013
இலங்கை::அதிகளவான தமிழர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படுவர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். தகுதிகளின் அடிப்படையில் அதிகளவான தமிழர்கள் எதிர்காலத்தில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்களை இராணுவத்தில் இணைப்பது குறித்து கவனம் செலுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சில தமிழ் பிரிகேடியர்கள் கடமையாற்றி வருவதாகவும் தமிழர்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பில் எவ்வித தடையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment