Saturday, January 26, 2013
சென்னை::இலங்கை அதிபர் ராஜபக்சே இனிமேல் இந்தியாவுக்கு வந்தால் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் (புலிகளின் ஆதரவு பரதேசி) வைகோ கூறினார்.
நாகை மாவட்டம் மயிலாடு துறையில் ம.தி.மு.க. சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மதிமுக பொதுச்செயலாளர் (புலி)வைகோ பேசியதாவது:
கொலை குற்றவாளி ராஜபக்சேவுக்கு, மத்திய அரசு ஆயுதங்களை அனுப்பி தமிழர்களை கொண்று குவித்து வருகிறது. குற்றம் சாட்டுவது போல் மத்திய அரசும், அதில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளும் நாடகமாடி வருகிறது.
தமிழர்களின் கொலைக் குற்றத்திற்கு காரணமான ராஜபக்சேவையும், அவருக்கு துணை நிற்பர்களையும் கூண்டில் ஏற்ற வேண்டும். இனிமேல் கொலை குற்றவாளி ராஜபக்சே இந்தியாவிற்கு வந்தால் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு இந்திய பிரதமர் வீட்டை முற்றுகையிட வேண்டும் என்றார்.
மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கிடப்பில் போட்டுவிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து வருகிறது கர்நாடக அரசு.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. இதில் மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியமானவை. அதன் விளைவாக இன்றும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை.
அதுபோன்று முல்லை, பெரியார், காவிரி பிரச்னைகளை அந்தந்தப் பகுதி பிரச்னை என்று பாராமல், ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
காவிரியில் தண்ணீர் வராததால் டெல்டா பகுதி விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதற்கான முழுப்பொறுப்பும் மத்திய அரசையே சாரும் என்று வைகோ கூறினார்.

No comments:
Post a Comment