Saturday, January 05, 2013
இலங்கை::புலிகளின் தொடர்ச்சியாக பலப்பொருந்தியிருந்தால், சிறுவர் போராளிகள் தொடர்பான பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வை பெற்றிருக்க முடியாது என்பதை சர்வதேச சமூகம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆயுத மோதலுக்கு சிறுவர்கள் பங்கேற்கச் செய்தல் இனிமேல் இலங்கையில் இடம்பெறாது என்ற தீர்மானத்தை எடுத்த, “சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை பணிக் குழு” தமது பணிகளை இங்கு நிறைவு செய்துகொண்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1998இல் சிறுவர்களை போராட்டங்களில் இணைப்பதை நிறுத்தும் முகமாக, ஐக்கிய நாடுகளுக்கும் புலிகளுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டது. ஆனால் புலிகளின் போராட்டம் ஒழியும் வரை சிறுவர்கள் அவ் அமைப்பில் இணைக்கப்பட்ட வண்ணமே இருந்தனர். சிறுவர்களை புலிகளிடம் இருந்து காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஐக்கிய நாடுகள் உட்பட கொழும்பில் அமைந்திருந்த தூதரகங்களும் அறிந்திருந்தன.
2009 பெப்ரவரி மாதம், அதாவது யுத்தம் நிறைவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் கூட புலிகள் ஆயுத முனையில் சிறுவர்களை போராட்டத்தில் இணைத்ததாக, அரசாங்கத்திடம் சரனடைந்த புலி உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
“இலங்கையில் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான வரைவு முடிவுரை”யை 2012 டிசம்பர் 19ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பணிக் குழு ஏற்றுக்கொண்டது.
பயங்கரவாதிகளை இல்லாது ஒழித்தமைக்காக இலங்கையை சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு முன்னர் கொண்டுவர முயற்சிப்பவர்கள் அனைவரும் இப் பயங்கரவாதிகள் சிறுவர்களை அவர்களது போராட்டத்தில் இணைத்துக்கொள்ள ஆர்வமூட்டியவர் ஆவார்கள் என பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
சிறுவர்களை போராட்டத்தில் ஊக்குவித்தவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ளதாக கூரிய பாதுகாப்புச் செயலாளர் இவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
No comments:
Post a Comment