Saturday, January 05, 2013
இலங்கை::மனித உரிமைகள் பார்வையானது, ‘தற்கொலை குண்டுத்தாக்குதலானது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும்’ என்பதன் தெளிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. மேலும் இவ் அமைப்பானது அரசியல் பிரமுகர்கள், தளபதிகள், மற்றும் இந்த தற்கொலை தாக்குதல்கள் ஊக்குவிக்க வசதிகளை ஏற்படுத்துவோர், ஊக்குவிப்போர் அனைவரும் சர்வதேச குற்றவியல் சட்டத்தின் நடைமுறைக்கமைய குற்றவாளிகள் என்றும் தெரிவித்துள்ளது.
[ரோம் தேசத்தின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், கட்டுரை 28 (பி), ஐக்கிய நாடுகளுக்கான அறிக்கை இல. A / conf. 183/9 (17 ஜூலை, 1998), 37 I.L.M. 999] இல் மனித உரிமைகள் பார்வைக்கான நிறைவேற்று இயக்குனர் கெனத் ரோத்தின் ஆக்கத்தில், தற்கொலை குண்டுத்தாக்குதலை முன்னெடுப்பவர்கள் எவரும் தியாகிகள் அல்ல, அவர்கள் போர் குற்றவாளிகள், எனவே இத்தகைய தாக்குதலை திட்டமிட உதவிய அடேல் பாலசிங்கம் போன்ற புலிகளின் பெண் போராளிகளின் தலைமை பயிற்சியாளர் போன்ற புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களும், மனிதகுலத்திற்கு எதிரான தமது குற்றங்களுக்கு விசாரணைக்காக சட்டத்தின் முன் நிற்க வேண்டும் என்றும், இந்தியா மற்றும் இலங்கை இதன் நிமிர்த்தம் இங்கிலாந்து அரசுக்கு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைகளை வழங்க வேண்டும் என்னும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கமானது அதன் கொலை அல்லது கொலை பயிற்சிகளை ரகசியமாக வைத்திருக்கவில்லை. 2002 ஆம் ஆண்டில் டைம்ஸ் பத்திரிகை ஒரு பெண் விடுதலை புலிகள் தளம் தொடர்பாக முதல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. வடக்கில் குடிகொண்டிருந்த நூற்றுக்கணக்கான சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் அனைத்தும் புலிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தது. அத்துடன் அவர்கள் எவராலும் புலிகளின் சிறுவர் ஆட்சேர்ப்பு தொடர்பாக அறிந்திருக்கவில்லை என்பதை மறுக்க முடியாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் யாரும் இவற்றை புறக்கணிக்கவோ, இது தொடர்பாக கவலைப்படவோ ஐ.நா அல்லது அவற்றின் அரசுகளுக்கு அறிக்கையிடவோ இல்லை. இச்சந்தர்ப்பங்களில் "மனித உரிமை" என்ற வார்த்தைக்கு உறுதியான கவனம் செலுத்தப்படவில்லை. சிறுவர்கள் தற்கொலையாளிகளாக உற்பத்தி செய்யப்பட்டு பழியாக்கப்பட சந்தர்பங்களில் இது தொடர்பாக குரலெழுப்ப எது அவர்களை தடுத்தது? ஏன் அடேல் பாலசிங்கத்திற்று எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் அடேல் பாலசிங்கம், பெண் புலிகளுக்கான தலைமைப் பொறுப்பாளராக கடமையாற்றியுள்ளார். அடேல் பாலசிங்கம் இலங்கையில் 10 வயது சிறுமிகளுக்கு பயிற்சிகளை வழங்கியதுடன், சிறுவர் போராளிகளின் கழுத்தில் சயனைட் வில்லைகளை மாட்டி படையினரிடம் சிக்கினால் சயனைட் வில்லைகளை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி பயிற்சி அளித்துள்ளார். மேல் நாட்டு பெண் மற்றும் தாதி ஒருவர் இவ்வாறு கொடூரமான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஆயிரக் கணக்கான இளம் சிறுமிகள் உயிரிழக்கக் காரணமாக யுத்தப் பயிற்சிகளை வழங்கிய அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக சர்வதேசம் ஏன் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை?
அப்பாவி சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கள், கழுத்தைச் சுற்றி சயனைட் அணிவித்தல் ஆகியவற்றிக்கு அடெலா பொறுப்பாக இருந்தார். இவருக்கு கட்டளையிடுவது மிகவும் இலகுவான ஒரு காரியமாகும். ஆனால் அதில் அப்பாவி பிள்ளைகளை இவர் தற்கொலை செய்ய வழிநடுத்துவது என்பது எவ்வளவு பாரதூரமானது. இதனை பயங்கரவாதிகள் மேற்கொள்வதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் ஒரு மேற்கத்தைய பெண் அதுமட்டுமல்லாது ஒரு தாதி இவ்வாறு நடந்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான சிறுவர் போராளிகளின் மரணத்திற்கு காரணமாகியுள்ளார். இதனை மேற்குலகம் கண்டுகொள்ளாதது போல் உள்ளது.
பல அப்பாவி உயிர்களின் மரணத்திற்கு காரணமான இவர் தற்போது சுரேயில் மிக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றார். இப் போர் குற்றவாளி பல உயிர்களை மரணிக்க செய்ய வழிசெய்துள்ளார். ஐக்கிய இராட்சியமானது புலிகளை தடைசெய்திருப்பினும், விடுதலைப்புலிகளின் சர்வதேச தலைமையகம் ஐக்கிய இராட்சியத்தின் தலைநகரில் இயங்கி வருகின்றது. பயங்கரவாதிகள் என்ற பெயர்பட்டியலில் இணைக்கப்பட்ட புலிகளின் கையாற்கள் தற்போது நிதி திரட்டல், அரசியலில் பங்கேற்றல் மற்றும் பொய் பிரசாரங்களை மேற்கொள்ளல் போன்ற பல சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை அவ் அரசாங்கம் கண்டுகொள்ளாதுள்ளது.
அடெலாவும், புலிகளும் திறமை மிக்க பலரின் மரணத்திற்கு பொறுப்பாளிகள். கட்டளை இடப்பட்டதற்கமையவே பலர் தற்கொலை செய்துள்ளனர். எந்தவொரு கரும்புலியினரும் மனநிலை பாதிகப்பட்டவர்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை அனைவரும் கட்டளைகளுக்கு பயந்தே பெறுமதிமிக்க தமது உயிர்களை மாய்துக்கொண்டுள்ளனர். 5000க்குமேற்பட்ட சிறுவர் போராளிகளை புலிகள் இயக்கத்தில் இணைத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருமாணத்தை பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களும், குறைந்த சாதியை சேர்ந்தவர்களுமே. இதனால் தான் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் இதனை கண்டுகொள்ளாது இருந்தனர் என்பதில் சந்தேகம் இல்லை.
அடெலா பாலசிங்கம் புலிகளின் பெண்கள் பிரிவிற்கு தலைமை வகித்தார். இவர் “சுகந்திரப் பறவைகள்” என அவ் அணிக்கு பெயர் சூட்டி அப் பெண்களுக்கு பொருளாதார ரீதியாகவோ, கலாச்சார ரீதியாகவோ அல்லது கல்வி சார்பாகவோ எந்தவித சுகந்திரத்தையும் வழங்காது மரணத்தை நோக்கி மட்டும் நகர்த்திச் சென்றார். இவர்கள் ‘சுகந்திரப் பறவைகள்’ எனப் பெயர் சூட்டியது சுகந்திரத்திற்கு மாறாக செயற்படுவதற்காகவா? இச் சிறுமிகளுக்கு கழிவறைக்கு செல்வதற்கான சுகந்திரம் கூட மறுக்கப்பட்டிருந்து. அங்கு செல்வதற்கு அவர் அனுமதி பெறுவதுடன், கூடவே வேறு சிலரும் அனுப்பப்படுவர். இவர்கள் அவ் அமைப்பை விட்டு விலகுவதற்கு முயற்சித்தாலோ அல்லது விரும்பம் தெரிவித்தாலோ அதற்கு கடுமையான தண்டைகளை இவர்கள் வழங்கியதை யாவரும் அறிந்ததே! உலகையும் அப்பாவி மக்களையும் ஏமாற்றுவதற்கே இவர்கள் இப் பெயரை சூட்டியுள்ளனர்.
புலிகள் முற்றாக ஒழிக்கப்ட்டதற்கு பின்னர் எந்தவொரு தற்கொலை தாக்குதலும் இடம்பெறவில்லை. எனவே தற்கொலை தாரிகள் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடெல் பாலசிங்கமும் உறுதுணையாக இருந்துள்ளார் என்பது ஆதாரங்களுடன் உறுதியாகின்றது. அவ்வாறு தற்கொலை தாரிகள் பிறப்பிலே உருவாகியிருந்தால் ஏன் விடுதலைப்புலிகள் இல்லாது ஒழிக்கப்பட்ட பின்னர் தற்கொலைத் தாக்குதல் இடம்பெறவில்லை, இவர்கள் இளைஞர் யுவதிகளை மூலை சலவை செய்து அவர்களது மனநிலையை மாற்றி, அவர்களது காரியத்தை இலகுபடுத்திக்கொண்டு, அவ் அளப்பறிய பெறுமதி மிக்க எதிர்கால சந்ததியினரின் உயிரை வீணாக இழக்கச் செய்துள்ளனர். இவ்வாறு தமது பிள்ளைகளையும், சகோதரர்களையும் இழந்த குடும்பங்கள் இன்னும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இது தொடர்பாக எவரும் கவலைப்படுவதில்லை. ஏனெனில் இவ்வாறு உயிரை மாய்துக்கொண்டவர்கள் குறைந்த சாதியை சேர்ந்த தமிழ் மக்களும், குறைந்த வருமாணம் பெறும் தமிழ் மக்களின் குடும்பங்களும் என்பதற்காகவே! ஆனாலும் இவர்கள் மனிதகுலத்தை சேர்ந்த எம்மைப் போன்ற மனிதர்கள் என்பதை இவர்கள் புரிந்துக்கொள்வது எப்போது?
No comments:
Post a Comment