Saturday, January 05, 2013
இலங்கை::பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி, இலங்கைக்கு எதிராக மேலும் இரண்டு போர்க்குற்ற வீடியோ படங்களை தயாரித்து வருவதாக திவயின பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இந்த வீடியோவுக்காக இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற 8 புலிகளின் ஆதரவாளர்கள், இலங்கைக்கு எதிராக பொய் சாட்சியங்களை வழங்கியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. தமிழ் கன்னியாஸ்திரி, வன்னியில் இருந்த புலிகளின் ஊடாகவியலாளர், புலிகளின் செயற்பாட்டாளர், வன்னியில் இருந்த புலிகளுக்குரிய வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இவ்வாறு பொய் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.
இந்த இரண்டு வீடியோ படங்களும், மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்திற்கு முன்னர் தயாரிக்கப்படுவதாக லண்டன் தகவல்கள் தெரிவித்தன. இலங்கையில் போர் குற்றங்கள் நடந்தது என்பதை சர்வதேசத்திற்கு தெரிவிப்பதற்காகவே இந்த படங்கள் தயாரிக்கப்படுவதாக திவயின கூறியுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் சர்வதேச தொலைபேசி வலையமைப்பு ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த வலையமைப்பு அமெரிக்காவில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு, கிழக்கில் இருந்து புலிகளின், ஆதரவாளர்கள் மூலம் இலங்கைக்கு எதிராக தகவல்களை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். இந்த சர்வதேச தொலைபேசி வலையமைப்பின் இலக்கம், இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ளது எனவும் திவயின கூறியுள்ளது.
No comments:
Post a Comment