Tuesday, January 29, 2013
இலங்கை::போதைப் பொருள் ஒழிப்பிற்கு முன்னுரிமை அமைக்கப்படும் என காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதே காவல்துறையினரின் முதன்மைக் கடமையாகுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் புதிய சட்டத்தைப் பயன்படுத்தி, விசாரணைகளை துரிதப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொச்சிகடே பிரதேசத்தில் காவல் நிலையமொன்றை திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment