Tuesday, January 29, 2013

கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெறவில்லை - தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய!

Tuesday, January 29, 2013
இலங்கை::கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெறவில்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அண்மையில் நிட்டம்புவ பிரதேசத்தில் மீட்கப்பட்ட 300 வாக்குச் சீட்டுக்கள் தொடர்பில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தக் வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்பட்டவை என அவர் தெரிவித்துள்ளர்.

இந்த வாக்குச் சீட்டுக்கள் அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட போது, லொறியின் உதவியாளரின் கவனயீனம் காரணமாக இந்த வாக்குச் சீட்டுக்கள் கீழே விழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்தலில் மோசடிகள் இடம்பெறவில்லை என்பதனை திட்டவட்டமாக அறிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment