Sunday, January 27, 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை சுமூகமான முறையில் நடாத்தும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன பிரித்தானியாவிற்கு விஜயம்!

Sunday, January 27, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை சுமூகமான முறையில் நடாத்தும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளார். அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் குழப்பங்கள் காரணமாக சர்வதேச ரீதியாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடாத்துவதற்கு பிரித்தானியாவின் ஆதரவை சஜின்வாஸ் திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில வேளைகளில் மாநாட்டை நடாத்தும் சந்தர்ப்பத்தை இழக்கக் கூடுமென பிரித்தானிய ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை விவகாரம் குறித்து கலந்தாலோசிக்கும் நோக்கில் விசேட அவசரக் கூட்டமொன்றை நடாத்த பொதுநலவாய நாடுகள் அமைப்பு உறுப்பு நாடுகள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவை, சஜின்வாஸ் குணவர்தன சந்தித்து நீண்ட பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.எவ்வாறெனினும், உறுப்பு நாடுகள் எடுக்கும் தீர்மானங்களை தடுத்து நிறுத்தக் கூடிய அதிகாரம் பொதுச் செயலாளருக்கு கிடையாது என தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment