Saturday, January 26, 2013
சென்னை::தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழவும், அவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்கவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையிலான (புலி ஆதரவு பரதேசிகளின்) ‘டெசோ’ அமைப்பு பாடுபட்டு வருகிறது.
ஈழத்தமிழர் வாழ்வுரிமையை பாதுகாப்பதற்காக சென்னையில் 12.8.2012-ல் டெசோ மாநாடு நடைபெற்றது. அதில் ஈழத்தமிழர் நல்வாழ்விற்காக எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை ஐ.நா சபை துணைப்பொதுச் செயலாளர் யான் லியா சன், ஜெனிவா மனித உரிமை ஆணையத்தலைவர் நவநீதம் பிள்ளை ஆகியோரிடம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்து வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி ஈழத்தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்டு சமத்துவம், அமைதி நிறைந்த வாழ்வு மேற்கொள்ள இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐ.நா. சபை தீவிர அழுத்தம் தரவேண்டும் என்று வற்புறுத்துவதற்காக, ஐ.நா. சபையை வலியுறுத்தும் வகையில் அதன் உறுப்பு நாடுகளை வற்புறுத்த (புலி ஆதரவு)‘டெசோ’ அமைப்பு முடிவு செய்துள்ளது.
இதற்காக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘டெசோ’ அமைப்பை சார்ந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலஷ்மி ஜெகதீசன் மற்றும் தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நாளை (27.1.2013) டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள்.
28, 29 ஆகிய தேதிகளில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் டெல்லியில் உள்ள ஐ.நா. சபை உறுப்பு நாடுகளான 47 நாடுகளின் தூதர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருக்கிறார்கள்.
ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழவும், ஈழத்தில் புணர்வாழ்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அரசியல் தீர்வு காணவும், ஜெனிவாவில் முன்மொழியப்பட்டு ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றிய தீர்மானத்தை உடனே நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசை நிர்பந்திக்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்ள இருக்கிறார்கள்.
இவ்வாறு டி.ஆர்.பாலு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment