Sunday, January 27, 2013
இலங்கை::அமெரிக்க ராஜாங்க அமைச்சின் தெற்காசியா மற்றும பசுபிக் விவகார பிரிவுக்கு பொறுப்பான மூன்று பிரதிச் செயலாளர்கள் குழுவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நேற்று சனிக்கிழமை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் ஆரம்பமான பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்ததாக கூட்டமைப்புக் குழுவிற்குத் தலைமை வகித்த அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் - தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்கள் நாட்டை ஆட்சிசெய்து வரும் பெரும்பான்மை இன அரசாங்கங்களின் கீழ் அடைந்து வருகின்ற துன்பங்கள் மற்றும் அநீதிகள் பற்றி ஆதியோடந்தமாக அமெரிக்கத் தூதுக்குழுவிடம் எடுத்துக் கூறினோம். அமெரிக்க குழு மிகவும் ஆர்வமாக அனைத்தையும் கேட்டறிந்து கொண்டனர் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment