Saturday, January 26, 2013

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கனடா கரிசனை!

Saturday, January 26, 2013
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம், இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகிஸ்வராவிடம் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

கனடாவின் வெளியுறவு பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

கனேடிய வெளியுறவு அமைச்சர், ஜோன் பேய்ர்ட் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகிஸ்வராவை சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பின் போது, 30 வருட போரின் பின்னர் இலங்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சித்திராங்கனி வாகீஸ்வரா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிரதம நீதியரசர் தொடர்பான குற்றவியல் பிரேரணை குறித்து கருத்துரைத்த அவர், நாட்டின் நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின்படியே குறித்த குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டது என்று விளக்கமளித்துள்ளார் எனவும் கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment