Friday, January 25, 2013

கண்டியில் அமைந்துள்ள புனித பௌத்த தளமான தலதா மகளிகை கொலைகார புலிகளினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன!

Friday,January 25, 2013
இலங்கை::கண்டியில் அமைந்துள்ள புனித பௌத்த தளமான தலதா மகளிகை கொலைகார புலிகளினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன!

ஜனவரி 25ம் திகதி 1998ல் லொறியொன்றில் வந்த கொலைகார புலிகளின்

தற்கொலைக் குண்டுகாவிகளினால் தலதா மாளிகை தாக்குதலுக்குள்ளானது.

இச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததோடு பெளத்த சமயத்தின் புனித தலமான தலதா மாளிகை சேதமடைந்தது.

இக்குண்டு வெடிப்பை  புலிகளே நிகழ்த்தினார்கள்
பொதுவாக அரச, பொருளாதார இலக்குகளையே புலிகளின் தாக்குதல் இலக்குகளாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலதா மாளிகை என்பது இலங்கையின் கண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற பௌத்த ஆலயம் ஆகும். பௌத்த சமயத்தவர்களால் உயர்வாக மதிக்கப்படுகின்ற புத்தரின் புனிதப் பல் இங்கே வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இது புனித தந்த தாது ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது.

1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் தலைநகரமாகக் கண்டி நகரம் விளங்கியது. அதனை ஆண்டு வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது.

இலங்கையிலுள்ள முக்கியமான பௌத்த பீடங்களான மல்வத்தை பீடம், அஸ்கிரிய பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பீடாதிபதிகள் ஆண்டுக்கு ஒருவராகச் சுழற்சி முறையில் இதன் உள் மண்டபத்தில் நாளாந்த கிரியைகளை நடத்தி வருகிறார்கள்.

காலை, மதியம், மாலை என நாளொன்றுக்கு மூன்று தடவைகள் கிரியைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு புதன்கிழமையும் புனிதப்பல் "நனுமுரா மாங்கல்யா" என்றழைக்கப்படும் நறுமணப்பூக்கள், மூலிகைகள் சேர்க்கப்பட்ட நீரால் நீராட்டப்படுகிறது. குணமாக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படும் இந்தப் புனிதநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment