Friday, January 25, 2013

மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Friday,January 25, 2013
மும்பை::இந்தியா முழுவதும் நாளை குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முக்கிய நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் டெல்லியில் 4 இடங்களில் குண்டு வெடிப்பை நடத்த முயற்சிக்க கூடும் என்று உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே உளவுத்துறை நேற்றிரவு மீண்டும் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. அதன்படி நாடெங்கும் உள்ள விமான நிலையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மும்பை விமான நிலையத்தில் சரக்கு பெட்டிகளுக்குள் ரகசியமாக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து நாசவேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்தது. கம்ப்யூட்டர் உதிரிப் பாகங்கள் என்ற போர்வையில் கூட வெடிகுண்டுகள் விமான நிலையத்துக்குள் எடுத்து வரப்பட வாய்ப்பு இருப்பதாக கூற்ப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மும்பை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படும் அனைத்துப் பொருட்களும் தீவிரமாக ஸ்கேன் செய்து பார்த்த பிறகே அனுமதிக்கிறார்கள். மும்பை விமான நிலையத் தாக்குதல் திட்டம் போல மற்ற விமான நிலையங்களிலும் முயற்சி செய்யக்கூடும் என்ற சந்தே கத்தில் நாடெங்கும் உள்ள விமான நிலையங்கள் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment