Saturday, January 26, 2013

இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது - வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

Saturday, January 26, 2013
இலங்கை::இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சில நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் அழுத்தங்கள் காரணமாக, சில நாடுகள் இலங்கை மீது கடுயைமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வெளிநாட்டு சக்திகளின் அசியல் உதைபந்தாக இலங்கை செயற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாரிய் வளங்கள் மற்றும் ஊடக வலையமைப்பின் ஊடாக இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க சில சக்திகள் முயற்சித்து செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கிய நாடு என்ற ரீதியில் உலக சமூகம் இலங்கைக்கு அனுதாபத்துடன் கூடிய ஒத்துழைப்பையே வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ளவர்களின் நோக்கங்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க இடமளிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதா இல்லையா என்பது குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமே தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பின்றி பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகளைத் தொடர முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment