Tuesday, January 29, 2013
இலங்கை::கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் இன்று வரை, அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமான முறையில் சென்றவர்களில், கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் சுமார் ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரமும் சொந்த விருப்பில் 13 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
உயர் ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமது சொந்த விருப்பிலோ அல்லது அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியவர்கள் 942 என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அவுஸ்திரேலியா சென்று அகதி அந்தஸ்து கோரிக்கை முடிவினை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்கள் தொடர்பான நடவடிக்கைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி, அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டங்களுக்கு அமைய இவர்கள் குறித்த முடிவுகள் நவ்ரு மற்றும் பப்புவா நியூ கினியாவில் உள்ள முகாம்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment