Saturday, December 01, 2012
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இடம் பெறும் பிரதேசத்திற்குள் ஐ.தே.க. எம்.பிக்களின் மெய்ப் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவின் வேண்டுகோளுக் கிணங்கவே இத் தடை அமைச்சர்க ளின் பாதுகாப்பு பிரிவு பிரதானியால் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாநாட்டு பிரதேசம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அவர்கள் துப்பாக்கியுடன் நடமாட முடியும். மாநாடு நடைபெறும் பகுதியில் மட்டும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என பிரதி சபாநாயகர் தெரிவித்தார். நேற்றுக் காலை சபை அமர்வின் போது தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட சில ஐ. தே. க. எம். பிக்கள் தமது மெய்ப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு நாளை (இன்று) துப்பாக்கிகளுடன் நடமாடுவது தடுக்கப்பட்டுள்ளது. இது எமது சிறப்புரிமையை மீறும் செயலாகும். இது விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டனர். இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர் - சபாநாயகரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வருவதாகத் தெரி வித்தார்.
இது தொடர்பில் நேற்றுப் பிற்பகல் பதில் வழங்கிய பிரதி சபாநாயகர், ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரின் வேண்டுகோளு க்கிணங்கவே மேற்படி தடை விதிக்கப்பட்டு ள்ளதாக சபையில் தெரிவித்தார். தயாசிறி ஜயசேகர, சஜித் பிரேமதாச, ரோசி சேனாநாயக்க, புத்திக பத்திரன, ஹரின் பெர்னாண்டோ உட்பட 33 ஐ. தே. க. எம். பிக்களின் பாதுகாப்பு உத்தியோக த்தர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டிரு ந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment