Saturday, December 01, 2012
இலங்கை::புலம்பெயர் புலி ஆதரவு தமிழ்மக்கள் இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களை தடுக்க முயற்சிப்பதாகவும், இலங்கை சுற்றுலா பிரயாணத்திற்கு உகந்த நாடு அல்ல என பிரசாரங்களை மேற்கொண்டுவருவதாகவும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்தவித சேவையையும் முன்னெடுப்பதில்லை என தெரிவித்து, இலங்கை தொடர்பான பிழையான வரைபடத்தை வெளிநாட்டவர்களின் மனதில் விதைக்கும் நோக்குடன் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கமானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கென, வடக்கின் வசந்தம் மற்றும் திவிநெகும திட்டங்களுக்கு மேலதிகமாக 2013ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மூலம் 8,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மிதிவெடியகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் அதேவேளை, மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் அரசாங்கம் பல திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதைத்தவிர முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment