Thursday, December 13, 2012
இலங்கை::காலி சிறைச்சாலைக்கு கைதியை பார்வையிடச் சென்றவர்கள் இருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரிடமிருந்து 3 கிராம்கள் 510 மில்லிகிராம்கள் அளவிலான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு வழங்குவதற்காக சந்தேகநபர்கள் இதனை எடுத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதான இருவரில் பெண் ஒருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காலி சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் கைதான சந்தேகநபர்கள் இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment