Thursday, December 13, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் புலிகள் குறித்து பேச வேண்டாம் என புலம் பெயர் (புலி ஆதரவு) தமிழர்கள் தடை - திவயின!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் புலிகள் குறித்து பேச வேண்டாம் என அறிவித்து, கூறி, புலம் பெயர் (புலி ஆதரவு) தமிழர்கள், அவருக்கு புலிகள் பற்றி பேச தடைவிதித்துள்ளதாக திவயின கூறியுள்ளது. புலிகள் தம்மை தாமே அழித்து கொண்டனர் என சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையே இதற்கான காரணமாகும்.
அதேவேளை சம்பந்தனின் இந்த கருத்து தொடர்பில், (புலி ஆதரவு) தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரது பேச்சு காரணமாக அவர், வெளிநாடுகளுக்கு வர இடமளிக்க போவதில்லை என புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் தெரிவித்துள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.
No comments:
Post a Comment