Thursday, December 13, 2012
இலங்கை::கொலைச் சம்பவமொன்றில் குற்றவாளியாகக் இனங்காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கேகாலை மேல் நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசூரியவே நால்வருக்கும் மரணதண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.
இந்த கொலைத்தொடர்பான வழக்கு கேகாலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டவிரோத மதுபான நிலையமொன்றை முற்றுகையிட்டபோது, பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இக்கொலை கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் இனங்காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கே மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment