Friday, December 14, 2012
இலங்கை::சாதாரண மக்களின் காணிகளை இராணுவ முகாம்களை நிர்மாணிக்க பயன்படுத்துவதில்லை எனவும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த சாதாரண மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, அவை மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் யாழ்ப் பிராந்திய இராணுவ கட்டத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய தூதுவர் மோஹான் போஸ்டரை அண்மையில் யாழ் இராணுவ தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு, கனேடிய தூதுவர் அங்கு விஜயம் செய்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஹத்துருசிங்க, யாழ் மாவட்டத்தின் அனைத்து அபிவிருத்தி பணிகள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களது பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக கூறியுள்ளார். இந்த சந்திப்பில் கனேடிய தூதரக அதிகாரியான எஸ்தர் வென்நேக்கும் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment