Friday, December 14, 2012
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை இழைத்த தவறுகளை ஆராய்வதற்கான மீளாய்வு 2013 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டிலேயே நிறைவு செய்யப்படும். என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளிநாட்டு செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில்; இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐ.நா இழைத்த தவறுகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட சாள்ஸ் பெட்றியின் அறிக்கையை மீளாய்வு செய்வதற்கான குழு நியமிக்கப்படும் என்று பான் கீ மூன் அறிவித்திருந்தார்.
இந்த மீளாய்வு 2013 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டிலேயே நிறைவு செய்யப்படும். இந்த மீளாய்வில், ஐ.நாவின் நிதியங்கள், திட்டங்களே பங்கேற்கும் என்றும், அனைத்துலக நாணய நிதியம் போன்ற முகவர் அமைப்புகள் இடம்பெறமாட்டாது என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மீளாய்வில் பங்கேற்பதற்கான பிரதிநிதிகளை நியமிக்கும்படி, ஐ.நா திணைக்களங்கள், நிதியங்களை அக்குழுவுக்குத் தலைமை தாங்கும் ஜான் எலியாசன, கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, லெபனானில் ஐக்கிய நாடுகள் போர்க் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகளின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவை தடுப்பதற்கு தனக்கு அதிகாரம் இல்லை.
சவேந்திர சில்வா, போர்க் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதை ஆசிய நாடுகள் பல ஆட்சேபிக்கின்ற போதிலும், அங்கத்துவ நாடுகளால் நியமிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில், அவரின் பணிகளில் தலையிட முடியாது என்றும் பான் கீ மூன் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment