Friday, December 14, 2012
சென்னை::ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் சத்யராஜ் நடிக்கிறார். முக்கியமான வேடம், தீபிகாவின் அப்பாவாக வருகிறார்.
இந்தப் படத்தில் (புலி விசுவாசி) சத்யராஜ் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை இலங்கையில் எடுப்பதாக இருந்தார் இயக்குனர். இலங்கையில் நடக்கும் படப்பிடிப்புகளிலோ, கேளிக்கையிலோ கலந்து கொள்ளக் கூடாது என்ற விதி இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. அப்படியிருக்க இலங்கைக்கு செல்வாரா (புலி விசுவாசி) சத்யராஜ்?
உடனடியாக ஷாருக்கானை தொடர்பு கொண்டு முடியாது என சத்யராஜ் கூறியதாகத் தெரிகிறது. சத்யராஜை இழக்க விரும்பாத அவரும் படப்பிடிப்பை இலங்கையிலிருந்து கோவாவுக்கு மாற்றியுள்ளார்.
சென்னை எக்ஸ்பிரஸில் தமிழர்களை மட்டம் தட்டும் காட்சிகள் இருப்பதாக ஒரு வதந்தி உலவுகிறது. புரட்சித் தமிழன் அடைமொழி வைத்து இதுபோன்ற படங்களில் நடிக்க இயலாது. பெயர் மட்டுமின்றி சத்யராஜின் உணர்வும் ஒத்துழைக்காது. முழு ஸ்கிரிப்டையும் படித்து திருப்தி என்றால் மட்டுமே மேக்கப், இல்லையென்றால் பேக்கப் என கறாராக இயக்குனரிடம் (புலி விசுவாசி) சத்யராஜ் தெரிவித்துள்ளதாக கூறுகிறார்கள்.
சுருக்கமாக சென்னை எக்ஸ்பிரஸில் (புலி விசுவாசி) சத்யராஜின் சீட் இன்னும் கன்ஃபார்ம் ஆகவில்லை
No comments:
Post a Comment